Saturday, June 18, 2011

பயணம்


தாலாட்டும் தென்றல்
செவிதனில் மெல்லிசை
நிழலாய்த் தோன்றும் காடுகள்
வெள்ளித் தட்டாய் ஒருமையில் காயும் குளிர் நிலவு
எங்கோ மனித சஞ்சாரத்தை உணர்த்தும் விளக்குகள்
தனிமையைத் தொலைக்க ஒரு புத்தகம்
மனதை மயக்கும் இரவில் ஓர் ஜன்னலோர ரயில் பயணம்
மாலை வானில் வெகுதொலைத் தேடலை முடித்து
கூட்டை நோக்கும் பறவையாய் - வீட்டை நோக்கி நான் !

No comments:

Post a Comment